கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்களில் அதிகரித்து வரும் விளம்பர தட்டிகளால் விபத்து ஏற்படும் அபாயம் மின் கம்பங்களில் தனியார் விளம்பர தட்டிகள் கட்டப்பட்டுள்ளதால் மின் கம்பங்களில் இருந்து கடைகள் மற்றும் வீடுகளுக்கு செல்லும் சர்வீஸ் வயர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மின்வாரிய ஊழியர் இந்த மின்கம்பத்தில் ஏறி அதனை சரி செய்வது வழக்கம் இப்படி தனியார் நிறுவனங்களால் விளம்பர தட்டிகள் மின்கம்பத்தில் கட்டப்படுவதால் பழுது ஏற்பட்டால் மின்வாரிய ஊழியர் மின்கம்பத்தில் ஏறுவதற்கு இந்த விளம்பர தட்டிகள் மிகவும் தடையாக உள்ளது மேலும் விளம்பர தட்டிகள் பாதுகாப்பற்ற வகையில் கட்டப்பட்டுள்ளதால் விளம்பரத்தை தட்டி மீது பொதுமக்கள் கை தெரியாமல் பட்டால் கூட மின் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
அண்மையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்கள் பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளுக்கு தடை விதித்தார் மேலூம் தடையை மீறி சுவரொட்டிகள் மட்டும் பேனர்களை நிறுவுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் ஆனால் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு சாமானிய பொதுமக்களுக்கு மற்றும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் பொருந்துமா மின்வாரியத்திற்கு பொருந்தாதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment