வடலூரில் வாடகை கார் ஓட்டுனர்களை தரைக்குறைவாக பேசிய தனியார் பேருந்து ஓட்டுநர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 December 2023

வடலூரில் வாடகை கார் ஓட்டுனர்களை தரைக்குறைவாக பேசிய தனியார் பேருந்து ஓட்டுநர்.


கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் நிலக்கரி ஏற்றிச் செல்லும் ரயில் ரயில்வே கேட்டை கடக்கும் முயன்றதால் ரயில்வே கேட் மூடப்பட்டது பின்னர் ரயில் கடந்ததும் காத்திருந்த வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டை கடக்க முற்பட்டனர் அப்பொழுது வடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்து பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்ததால்  பின்னால் வந்த ஆட்டோ பேருந்தின் பின்பக்கத்தில் மோதியது, இந்த விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படாத நிலையில் பேருந்தில் பின்பக்கம் ஆட்டோ மோதியதால் பேருந்தில் பெயிண்ட் சேதமானது எனக்கூறி தனியார் பேருந்து  ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஆட்டோ ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது அப்பொழுது அருகில் இருந்த கார் ஸ்டாண்ட் சேர்ந்த கார் ஓட்டுநர்கள் பேருந்தில் பயணிகள் அதிக அளவில் உள்ளார்கள் எந்த ஒரு பாதிப்பும் பெரிதாக ஏற்படவில்லை பேருந்து எடுங்கள் என்று பேருந்து ஓட்டுனரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் வாடகை கார் ஓட்டுநர்களிடம் தகாத வார்த்தையில் பேசி ரகலையில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து பேருந்தை அனுப்பி வைத்தனர் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இது போன்ற பொதுமக்கள் பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*/