குடும்பத்துடன் சென்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி செல்ல போவதாக என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 December 2023

குடும்பத்துடன் சென்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி செல்ல போவதாக என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் வடக்குத்து பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னதாக தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நேரடியாக வந்து ஆதரவு தெரிவித்த தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் கணவரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


பின்னர் என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் நல சங்க சிறப்பு தலைவர் சேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி அன்று ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கடலூர் தபால் நிலையத்திலிருந்து புறப்பட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக செல்லப் போவதாக அறிவித்தனர் 

  1. இதற்காக ஒப்பந்த தொழிலாளர்களின் கிராமங்களில் வீடு வீடாக சென்று அவர்களின் குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுக்க போவதாகவும்
  2. இன்கோசர்வு சொசைட்டியின் கீழ் பணி புரியும் 6000 தொழிலாளர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் thereft பிடித்தம் செய்த கணக்கு மற்றும் ஓய்வூதிய benifit ,death benifit உள்ளிட்டவர்களை உடனடியாக எல்.எல்.சி நிர்வாகம் வழங்க வேண்டும்.
  3. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் என்.எல்.சி இந்தியா நிர்வாகத்துடன் மேற்கொண்ட ரகசிய உடன்பாடு தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதை தமிழக அரசுக்கு தெரிவித்தல்


உள்ளிட்ட ஐந்து முக்கிய தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

No comments:

Post a Comment

*/