பரவனாறு பாலம் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மருவாய் அருகே உள்ளது, மிகவும் பழமையான குறுகிய பாலத்தில் ஒரே சமயத்தில் ஒரு திசையில் வரும் வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும் எதிர் திசையில் வரும் வாகனங்கள் எதிரே வரும் வாகனம் கடந்த பின்பு மட்டுமே செல்ல முடியும், விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக குறுகிய பாலத்தின் அருகே புதிய பாலம் அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்து திருவாரூர் நோக்கி பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து வடலூர் அடுத்த மருவாய் அருகே சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரவனாறு பாலத்தை கடக்க முற்பட்ட பொழுது ஒரே சமயத்தில் பேருந்தும் எதிரே திசையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற மகேந்திரா வேனும் பாலத்தில் நுழைந்ததால் இரு வாகனங்களும் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டது இதில் மகேந்திரா வேனில் வந்த பயணிகள் அச்சம் அடைந்து வேனை விட்டு கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment