இந்நிலையில் வெங்கடேசன் தனது கிராமமான முதனைக்கு செல்லும் வழியில் மேலக்குப்பம் அடுத்த காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார் இதனை அவ்வழியே சென்ற பொதுமக்கள் வெங்கடேசன் உறவினர்களுக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற உறவினர்கள் அவரை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டததாக கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உடல்நலக்குறைவு எற்பட்டவுடன் பணியில் இருந்த கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக விட்டுக் அனுப்பி வைத்தால் வெங்கடேசன் உயிரிழந்தாக கூறி விடுதலை சிறுத்தை கட்சியின் கடலூர் மைய மாவட்ட செயலாளர் பி ஆர் நீதி வள்ளல் தலைமையில் என்.எல்.சி இரண்டாம் அனல் மின் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது என்.எல்.சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இறந்த வெங்கடேசன் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடி வேலை வழங்க வலியுறுத்தினர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment