ஆனால் கண்காணிப்பாளர் அவரை முதலுதவி சிகிச்சைக்காக, என்.எல்.சி மருத்துவமனைக்கு அனுப்பாமல், Get Pass கொடுத்து, வெங்கடேசனை வீட்டிற்கு தனியாக அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான நெஞ்சு வலியுடன், வெங்கடேசன், தனது ஊருக்கு செல்லும் வழியில், மேலக்குப்பம் கிராமத்தின் அருகே காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, அவர்களின் உறவினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள், அவரை தூக்கிக்கொண்டு, அரசக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அரசகுழி ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர்கள் இல்லாததால், விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டததாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் உறவினர்கள், நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையம் முன்பு, வெங்கடேசன் சாவுக்கு என்எல்சி கண்காணிப்பாளர் மற்றும் பணியில் இருந்த அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என்றும், நெஞ்சுவலி என்று கூறிய வரை என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், வெளியே அனுப்பி வைத்ததால் இறந்து விட்டதாகவும், அவரை மருத்துவமனைக்கு அனுப்பிஇருந்தால், வெங்கடேசன் உயிரை காப்பாத்தி இருக்கலாம் என உறவினர்கள் இரண்டாவது அனல்மின் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இறந்த வெங்கடேசனுக்கு, நீதி கிடைக்காத வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment