கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரத்தில், புரட்சித்தலைவரின் எம்ஜிஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு, அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், கழக அமைப்பு செயலாளருமான சொரத்தூர். ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புகழ் மற்றும் சாதனைகளைப் பற்றி எடுத்துக் கூறி, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நெய்வேலி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியன், நகர செயலாளர் கோவிந்தராஜ், நகர தலைவர் வெற்றிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் சத்யாஅன்பு, பாண்டுரங்கன், மாவட்ட அவைத் தலைவர் முத்துலிங்கம், மாவட்ட பொருளாளர் தேவநாதன், ஒன்றிய செயலாளர் அண்ணாமலை மற்றும் என்எல்சி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தே.தனுஷ் குறிஞ்சிப்பாடி செய்தியாளர் 8667557062
No comments:
Post a Comment