கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அதிமுக நகர கழகம் சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 36 வது ஆண்டு நினைவஞ்சலி சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள அதிமுக நகர கழக அலுவலகத்தில் நகரச் செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன் தலைமையில் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர்எம்ஜிஆரின்திரு உருவப் படத்தை வைத்து மாலையிட்டு, பூத்தூவி, மரியாதை செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் சேத்தியாத்தோப்பில் சென்னை கும்பகோணம் மெயின் ரோட்டில் ராஜீவ் காந்தி சிலை அருகே மௌன ஊர்வலமும் நடைபெற்றது. இதில் முன்னாள் நகர செயலாளர் எஸ் கே நன்மாறன், நகர துணைச்செயலாளர் சம்பத்,அவைத்தலைவர் கோழி கோவிந்தசாமி, பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி தெய்வ.ராஜ குரு, பேரூராட்சி1வது வார்டு செயலாளர் கே.பி.ஜி கார்த்திகேயன், அதிமுக வார்டு கவுன்சிலர்கள் டைலர் குணசேகரன்,மதியழகன், லிங்குசாமி, ஸ்ரீதர், அண்ணா பிரபாகரன், அஞ்சாபுலி, தங்கமணி, சங்கர்,மற்றும் மாரியப்பன் ரவி, ராமமூர்த்தி, மகேந்திரன், கோபால், வீரமணி, சிவகுமார், மணிமாறன், குருதேவ்சிங் மற்றும்ஏராளமான அதிமுக தொண்டர்கள் இந்த நினைவஞ்சலியில் பங்கேற்று புரட்சித் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment