தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களின் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தனக்கேசவ மூர்த்தி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட பேரணி வடலூர் நான்கு முனை சந்திப்பு வழியாக சென்று பின்னர் வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் நிறைவு பெற்றது.
பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியில் அணிவகுத்து சென்றனர், பின்னர் வடலூர் தனியார் பள்ளியில் அறிவியல இயக்கத்தின் துணைச் செயலாளர் பாலு தலைமையில் நடைபெற்ற மாநாட்டு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக ஜெயபிரகதி மற்றும் அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் எம்.எஸ் ஸ்டீபன் நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போதை ஒழிப்பு குறித்தும் அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்.
பின்னர் அனைவரும் போதை ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர், நிகழ்ச்சியில் R.தாமோதரன், கடற்கரையோர வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் S.G ரமேஷ்பாபு மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment