கடந்தாண்டு காலம் தாழ்த்தி அறிவிப்பு வெளியிட்ட அரசு இந்த ஆண்டு விரைவாக அறிவிப்பு வெளியிட்டு பொங்கல் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கரும்புகள் வீதம் பன்னீர் கரும்புகளை வழங்க வேண்டும் எனவும்அப்போதுதான் கரும்பு பயிரிடும் தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் பன்னீர் கரும்புகளை வேளாண்மைப் பட்டியலில் சேர்த்து அதற்கு பயிர் பாதுகாப்பு மற்றும் நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் உரிய நிவாரணம் வழங்கவும் கரும்புகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யவும் பன்னீர் கரும்பு பயிரிடும் இந்தப் பகுதி விவசாயிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
மேலும் பன்னீர் கரும்பு கடந்த காலங்களில் அதிக எண்ணிக்கை ஏக்கரில் பயிர் செய்து வந்த நிலையில் தற்போது பரப்பளவு குறைந்து அவை வெறும் 150 ஏக்கர் அளவில் குறைந்து விட்டன. மேலும் பன்னீர் கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து விடாமலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் விரைவில் தங்களுக்கு அரசு கொள்முதல் செய்யும் விபரத்தை வெளியிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment