கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் வர்த்தக சங்கம் சார்பில் சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்குவதற்கு, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வடலூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த, வர்த்தக சங்கம், அரிமா, ரோட்டரி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பொருள் வழங்கும் நிகழ்ச்சி குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் வர்த்தக சங்க நிர்வாகிகள் மாவட்ட துணைத்தலைவர்,டி ஆர் ராஜ மாரியப்பன், வடலூர் நிர்வாகிகள் சந்திரகாசன், ஆர்.கே குழும நிறுவன அதிபர் ராமலிங்கம், ஞானசேகர் ஆகியோர், குறிஞ்சிப்பாடி வட்டாசியர் சுரேஷ்குமாரிடம் வழங்கினார்கள், இதில் நிவாரணப் பொருளாக, அரிசி, கோதுமை மாவு, ரவை, கோதுமை ரவா, சேமியா பாக்கெட், உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment