கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அம்பாள்புரம் கிராம உள்ளது. இந்த கிராமத்தில் கிராம சாலையோரம் தாழ்வான இடத்தில் மழை தண்ணீர் தேங்கி பல நாட்களாக வெளியேற வழி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் அருகில் உள்ள வயதான பெண்மணியின் கூரை வீடானது மழை தண்ணீர் தேங்கிகுடியிருப்பதற்கேமுடியாமல் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
மழை தண்ணீர் தேங்காமல் வெளியேற்ற வேண்டும் என கூறுகின்றனர். தேங்கிய இந்த தண்ணீர் அதுவாக வெயிலில் வற்றினால் தான் உண்டு என்பதே இங்குள்ள நிலை, தற்போது இந்த வயதான பெண்மணி பவானி என்பவரின் கூரை வீடு முற்றிலும் நொறுங்கிப் போய் சேதம் அடைந்துள்ளது. அவர் பகலில் கூட இங்கு தங்க முடியாமல் ஊருக்குள்ளே உள்ள அவரது உறவினர்கள் தெரிந்தவர்கள் வீடுகளில் தாழ்வாரத்தில் தங்கி இருந்து வருவதாக வேதனையோடு குறிப்பிடுகிறார்.
நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்தி மழை தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment