அப்பொழுது கதவு பூட்டி இருந்ததால் கதவை உடைத்து பார்த்த பொழுது முருகன் என்பவர் அழிகிய நிலையில் நிலையில் இறந்து கிடந்தார் உடனடியாக அவருடைய நண்பர்கள் மருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மருதூர் போலீசார் உடலை பார்த்த பொழுது துர்நாற்றம் வீசியும் அழிகிய நிலையில் கிடந்ததை பார்த்தனர் உடனடியாக அவருடைய உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மருதூர் போலீசார் உடலை கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு உடல் கூர் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இறந்த முருகனின் தம்பி மனைவியாகியதி.வேம்பரசி (லேட்) க/பெ திருமேனி வயது 37 என்பவர் முருகனின் இறப்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இறந்தவரின் மொபைல் ஃபோனை கண்டுபிடித்து அதில் யார் யார் தொடர்பில் இருந்துள்ளார்கள் என்பதனை அறிந்து எனது சந்தேகத்தினை நிவர்த்தி செய்ய வேண்டி மருதூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் இடத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகாராக தெரிவித்தார், அதன் பேரில் மருதூர் போலீசார் அவருடைய புகாரை ஏற்றுக்கொண்டு உடல் கூர் ஆய்வுக்குப் பிறகு தகவல் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என மருதூர் போலீசார் தெரிவித்தனர்.
உடல் கூர் ஆய்வு செய்து முடித்த பிறகு உறவினர் இடத்தில் உடல் கொடுக்கப்பட்டு ஊரில் தகனம் செய்யப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து நாட்களாக ஆண் சடலம் அழிகிய நிலையில் இருந்ததால் கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
No comments:
Post a Comment