கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்வது பற்றி அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் நல்லதம்பி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் மற்றும் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிவேல், சுகாதார ஆய்வாளர் வனிதா ஆகியோர் இணைந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்து வந்த சேத்தியாத்தோப்புப் பகுதி மற்றும் குமாரகுடி, வளையமாதேவி ஆகிய இடங்களில் இன்று நான்கு கடைகளை மூடி சீல் வைத்தனர்.
பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும், மற்றும் பொதுமக்கள்புகையிலை பொருள்களுக்கு அடிமையாகி வருகிற காரணத்தால் கடைக்காரர்கள் யாரும் தங்களது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுரையும் வழங்கினர்.
No comments:
Post a Comment