கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வட தலைக்குளம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் சாலையில் நள்ளிரவில் நல்ல நிலையில் இருந்த இருசக்கர வாகனமான ஸ்கூட்டியொன்று எரிந்து கொண்டிருந்தது. இதனை அப்பகுதி வழியாக சென்ற போலீசார் கவனித்தனர். அங்கு ஆள் நடமாட்டம் ஏதுமில்லை.
மேலும் எரிந்த ஸ்கூட்டி வாகனம் பெட்ரோலால் ஓடக்கூடியதா? அல்லது பேட்டரி வாகனமா? என்று ஆய்வு செய்ய முடியாத அளவுக்கு எறிந்து கருகி போய்விட்டது.வாகனம் எரிந்த சாலையானது கிராமப் பகுதியாகவும் இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலும் இப்படி நடந்திருப்பதனால் இது எப்படி நடந்தது? ஏன் நடந்தது? என்று பொதுமக்கள் மற்றும் போலீசாரிடையே மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களைக் கொண்டு காட்சி ஏதாவது பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். கிராமப் பகுதியில் இருசக்கர வாகனம் எரிந்து கருகி சாம்பலாகிய சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment