கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கங்கைகொண்டான் பேரூராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது, கங்கைகொண்டான் பேரூராட்சி தலைவர் பரிதா அப்பால் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் நகராட்சி நிர்வாகம், மின்சாரம், பேரிடர் மற்றும் மேலாண்மை துறை, காவல்துறை, மருத்துவத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, உள்ளிட்ட பல்வேறு அரசு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் கம்மாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட கங்கைகொண்டான் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment