கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள பின்னலூரில் மெயின் ரோட்டின் அருகே வசித்து வருபவர் நித்தியானந்தன். இவர் தற்போது தனது பிள்ளைகளுடன் வெளியூரில் தங்கியுள்ளார். இந்நிலையில் பின்னலூர் கிராமத்தில் உள்ள இவரது வீடு நீண்ட நாட்களாக பூட்டியிருப்பது வழக்கம். எப்பவாவது ஊருக்கு வரும் நித்யாநந்தன் தனது குடும்பத்தினருடன் சில நாட்கள் பின்னலூரில் தங்கியிருந்துவிட்டு மறுபடியும் குடும்பத்தினரோடு வெளியூர் செல்வார்.
இந்நிலையில் நீண்டநாட்களாக வீடு பூட்டியே இருப்பதைக் கண்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 6 பவுன் நகை, சுமார்ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவைகளை திருடிச் சென்றுள்ளனர். வீடு பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடப்பதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் வெளியூரில் உள்ள நித்யானந்தன் குடும்பத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
இதுகுறித்து நித்யானந்தன் மகன் சிவராமன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment