சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுப் பகுதியில் முதலை நடமாட்டம்; மக்கள் அச்சம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 December 2023

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுப் பகுதியில் முதலை நடமாட்டம்; மக்கள் அச்சம்.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் வெள்ளாற்றில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அணைக்கட்டு ஒன்று அமைந்துள்ளது. இந்த சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுப் பகுதியில் மேற்குப் பக்கம் தற்போது நீர் குறைந்து வரும் நிலையில் முதலை நடமாட்டம் இருந்து வருகிறது. இப்பகுதியில் இருக்கும் தண்ணீரில் மீனவர்கள், இப்பகுதி மக்கள் பயன்படுத்துவதோடு கால்நடைகள் ஃபுல் மேய்ந்துவிட்டு தாகத்தை தீர்ப்பதற்கு இங்கே தண்ணீர் குடிக்கவும் இவ்விடத்தில் உள்ளஆற்று நீரினை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது இப்பகுதியில் முதலை நடமாட்டம் இருந்து வருவதால் அவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கு முதலைகள் நடமாட்டம் இருந்து வருவதைஅறிந்த பலரும் அணைக்கட்டு கரைப்பகுதியில் இருந்து வேடிக்கை பார்த்தும், போட்டோ, வீடியோ எடுத்தும் செல்கின்றனர். கண்ணுக்குத் தெரிவது ஒரு முதலையாக இருந்தாலும் இன்னும் கூடுதலாக நீருக்குள் இருக்குமோ என்று இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த முதலையைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதியினர் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/