நெய்வேலி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை சார்பில் முப்பெரும் விழா நெய்வேலி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 December 2023

நெய்வேலி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை சார்பில் முப்பெரும் விழா நெய்வேலி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நெய்வேலி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா, இந்திய சுதந்திர பவள விழா, 32 ஆம் ஆண்டு தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

நெய்வேலி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவையின் தலைவர் M. தங்கம் அவர்கள்   குற்றுவிளக்கு எற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பின்னர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துரை.ஜெயச்சந்திரன் அவர்கள் முப்பெரும் விழா மலரை வெளியிட்டார். நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது


நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நீதி அரசர் துரை. ஜெயச்சந்திரன் அவர்கள் பேசுகையில் நுகர்வோர்களின் பாதுகாக்கவும் நுகர்வோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காணவும் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை தொடங்கப்பட்டுள்ளது எனவும் கடைகளில் பொருட்களை வாங்கும் நுகர்வோர் தங்கள் வாங்கும் பொருட்களின் காலாவதி தேதி மற்றும் தரம் குறித்து நன்கு அறிந்த பின்னரே பொருட்களை வாங்க வேண்டும் மேலும் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கிராமப் பகுதி மற்றும் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நிகழ்ச்சியில் எடுத்துரைத்தார்.


நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட பழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் ராஜி, நெய்வேலி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவையின் பொதுச் செயலாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/