கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் முகாம் நேற்று (29-12-2023) நடைபெற்றது. இந்த முகாமுக்கு சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மன்றத் தலைவர் தங்க. குலோத்துங்கன் தலைமை தாங்கினார். புவனகிரி தாசில்தார் தமிழ்ச்செல்வி, துணை தாசில்தார் ஆனந்தி, துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் பழனிவேல், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் புகழேந்தி, நகரச் செயலாளர் வக்கீல் மனோகரன், கருவாச்சி துணைத்தலைவர் எஸ் கே.கருணாநிதி, மற்றும் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஜெயக்குமார், செந்தில், ராணி, சாந்தா, கீதா, கலைச்செல்வி கலைவாணன், திருமாவளவன், தமிழ்ச்செல்வி, செந்தமிழ்ச்செல்வி, பவானி, சுமதி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.
சேத்தியாத்தோப்புகாவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரா, செல்வராஜ், காந்தி, மற்றும் மின்வாரிய அலுவலர் தமிழ்மணி, மின் உதவிப் பொறியாளர் அம்பேத்கர், பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய வார்டன்கள் தேன்மொழி, தண்டபாணி, விஏஓ நடராஜ், விஏஓஉதவியாளர் அன்புதாஸ், ஆதிதிராவிடர் நலத்துறை வார்டன் ஸ்ரீதர், குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஆனந்தி, நில அளவையர் தாரணி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மனுக்களைஉரியவர்களிடம் கொடுத்தனர்.
No comments:
Post a Comment