கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அள்ளூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கியப்பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்த நிலையில் அதனை ஏற்ற கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற உத்தரவிட்டார்.
அதன்படி நடைபெற்று வந்த பணிகள் முடிவுற்று திறப்பு விழா நடைபெற்றது.ஒன்றிய கவுன்சிலர் செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ். பி. கருப்பன், பூதங்குடிஊராட்சி மன்றத் தலைவர் ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் பங்கேற்று புதிய பேருந்து நிழற்குடையை ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் அதிமுகவின் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன், மாணவர் அணித் தலைவர் வீரமூர்த்தி, உள்ளிட்ட அதிமுகவின் ஏராளமான நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment