குறிஞ்சிப்பாடி அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி அருகே அணுக்கம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி சுஜாதா 29;
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் அனுக்கம்பட்டு பஞ்சாயத்தில் தொழிற்சார் சமூக வல்லுனராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் புவனகிரி அருகே குரியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ஜெயக்குமார் 25; என்பவருக்கும் சுஜாதாவுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் சுஜாதா வேலை செய்யும் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஜெயக்குமார் அசிங்கமாக திட்டி செல்போனில் இரண்டு பேரும் இருக்கும் போட்டோ வைத்திருப்பதாகவும் அதை வெளியில் விட்டு விடுவதாகவும் தனது ஆசைக்கு இணங்குமாறும் கூறி பாலியல் தொந்தரவு செய்தும் இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டினார்.
இது குறித்து சுஜாதா கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து ஜெயக்குமார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment