பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுகுப்பம் கடலில் மாயமான மீனவர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 December 2023

பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுகுப்பம் கடலில் மாயமான மீனவர்


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புது குப்பம் நடுத்தெருவை சேர்ந்த ஜெயசீலன் வயது 40 என்பவரும் அவருடன் சக மீனவர்கள் அமுது. சக்திவேல் ஆகிய மூன்று பேரும் வழக்கம் போல் இன்று  அதிகாலை 5 மணி அளவில் புது குப்பம் கடலுக்கு மீன் பிடிக்க சென்று உள்ளனர்.

அப்போது அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் விசைப்படகு கடலில் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் படகில் இருந்த மூவரும் கடலில் விழுந்தனர் இதில் சிறிய காயங்களுடன் அமுது சக்திவேல் கரை ஒதுங்கியனர், ஜெயசீலன் கரை ஒதுங்காமல் கடலில் மாயமானதை அங்கிருந்த பொதுமக்கள் பரங்கிப்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கடலில் தேடி வருகின்றனர், மேலும் பரங்கிப்பேட்டை காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


- செய்தியாளர் சாதிக் அலி

No comments:

Post a Comment

*/