கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட கடைவீதிகளில் உள்ள ஹோட்டல்கள் மளிகை கடைகள் டீக்கடைகள் இவைகளில்உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது கலப்படடீத்தூள் பயன்படுத்தி டீ தயாரித்த ஒரு கடையிலிருந்து இரண்டு கிலோ டீத் தூள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. ஹோட்டல்களில் ஆய்வு செய்யப்பட்டு சரியானசுகாதாரம் இன்றி இருந்த ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. குடிநீர் பாதுகாக்கப்பட்டதாக வழங்கப்பட வேண்டும் என்றும், தரமான மூலப்பொருளைக் கொண்டு உணவு தயாரிக்க வேண்டும் என்றும், வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தைப் பார்ப்பது போல மக்களின் சுகாதாரத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு வியாபாரம் செய்ய வேண்டும் என்றும் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டது. மற்றும் ஹோட்டல் பணியாளர்கள் மருத்துவ தகுதிச் சான்று பெற வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment