வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 December 2023

வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் ஊராட்சி பகுதிகளில்  மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய நிலையில் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில்  வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் சுமார் பத்து வார்டுகளுக்கு முதற்கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தை குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இம் முகாமில் மின்சாரத்துறை ,பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம் வட்டார வளர்ச்சித்துறை, குடிநீர் வழங்கல்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின் இணைப்பு ,பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆன்லைன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் வடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை செலுத்த சிறப்பு கவுண்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும்  வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முகாமிற்கு வரும் பொது மக்களுக்கு ரத்த பரிசோதனை சர்க்கரை அளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.


இம்முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான சேவைகளை பெற ஆன்லைனில் பதிவு செய்து கொண்டனர், இந்நிகழ்வில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் நகர செயலாளர் தன தமிழ் செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/