மந்தாரகுப்பம் காவல் நிலையம் அருகே நள்ளிரவில் மளிகை கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூபாய் 31,500 பணத்தை திருடி சென்ற மர்ம நபர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 December 2023

மந்தாரகுப்பம் காவல் நிலையம் அருகே நள்ளிரவில் மளிகை கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூபாய் 31,500 பணத்தை திருடி சென்ற மர்ம நபர்.


கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் இவர் மந்தாரக்குப்பம் காவல் நிலையம் அருகே  மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார் இந்நிலையில் நேற்று மழை பெய்ததால் இரவு முன்னதாகவே கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற குமரேசன் இன்று காலை  வழக்கம் போல் கடைக்கு வந்துள்ளார் அப்பொழுது அவரின் கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் கடைக்கு உள்ளே சென்று கல்லாவை பார்த்த பொழுது அதிலிருந்த 31,500 ரூபாய் பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் மேலும் கடைக்குள் பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த மூன்று சிகரெட் பாக்கெட்டுகளையும் இத்துடன் திருடி சென்றதும் மேலும் அருகில் இருந்த இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது பின்னர் இது குறித்து குமரேசன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மந்தாரக்குப்பம் காவல்துறையினர் கடையை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இரவு நேரங்களில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் இராஜாராம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்  காவல்துறையினர் முழு நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் காவல் நிலையம் அருகே மளிகை கடையை உடைத்து பணத்தை திருடிச் சென்ற இச்சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

*/