வடலூர் பண்ருட்டி சாலை பெட்ரோல் பங்க் எதிரே உள்ள பிரபல டீக்கடையில் டீயில் கிடந்த கொசு கடைக்காரரிடம் இதுகுறித்து கேட்ட பொழுது அதை ஊத்திட்டு வேற வாங்கிக்கோங்க என்று அசால்டாக பதில் கூறினார். கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் பல தேநீர் கடைகள் இயங்கி வருகின்றனர் இந்த தேநீர் கடைகளில் சிற்றுண்டி வகைகளான உளுத்து வடை கல்லவடை, கேழ்வரகு அடை ,மிளகாய் ப போண்டா உள்ளிட்ட சிற்றுண்டிகள் தயாரிக்கப்பட்டு தினமும் விற்கப்பட்டு வருகிறது.
இந்த சிற்றுண்டிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெயில் கலப்படம் இருப்பதாக பல புகார்கள் எழுந்துள்ள நிலையில் பண்ருட்டி சாலையில் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள பிரபல டீக்கடை ஒன்றில் டீ சாப்பிட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட டீயில் கொசு கிடந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனை கவனிக்காமல் டீயை குடித்த அந்த நபர் திடீரென கொசுவை பார்த்ததும் கல்லாவில் உள்ள கடை உரிமையாளரை கேட்ட பொழுது அவர் அசால்டாக அதை ஊத்திட்டு வேற வாங்கிக்கோங்க இது ஒரு பெரிய விஷயமா என்று கூறியதால் அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து வசூல் வேட்டையில் மட்டும் ஈடுபடும் உணவுத்துறை அதிகாரிகள் இதுபோன்று சுகாதாரமற்ற வகையில் பொதுமக்கள் சாப்பிடும் உணவுப் பொருட்களை தயாரித்து வரும் உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment