கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத் துறை சாலை பராமரிப்புப் பணியில் சாலையோரங்களில் களிமண்ணை கொட்டி வைத்துள்ளனர். பின்னலூர் முதல் குமாரக்குடி வரை சுமார் ஏழெட்டுகிலோ மீட்டர் தூரம் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பராமரிப்பு ப்பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சாலையை தரமாக அமைக்க இப்பகுதி மக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்த நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் தற்போது சாலை பராமரிப்பு பணியின் போது சாலையோரங்களில் செம்மண் கொட்டாமல் விதிமுறையை மீறி சாலையோரங்களில் களிமண்ணை கொண்டு கொட்டி வருகின்றனர். இதனால் வாகனங்கள் வழுக்கி விழுந்துவிபத்தில் சிக்குகின்ற அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
பல வாகனங்கள் மற்ற வாகனத்திற்கு வழி விடும்போது சாலையோர களிமண் சேற்றில் சிக்கிக் கொள்ளவும் நேருகின்றன. சாலையோரங்களில் சாலை விதிமுறைப்படி செம்மண் கொண்டு நிரப்ப்படவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment