கல்லிலே கலைவண்ணம் கண்ட சிற்பிகள் சொல்லிலே கவிதை வடிக்கும் கவிஞர்கள் இவர்கள் வரிசையில் நெல்லிலே சிற்பங்களை செதுக்க முயற்சித்து வரும் இயற்கை விவசாயி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 December 2023

கல்லிலே கலைவண்ணம் கண்ட சிற்பிகள் சொல்லிலே கவிதை வடிக்கும் கவிஞர்கள் இவர்கள் வரிசையில் நெல்லிலே சிற்பங்களை செதுக்க முயற்சித்து வரும் இயற்கை விவசாயி.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து இயற்கையான முறையில் விவசாயம் செய்து வருகிறார் நெல்செல்வம் என்கிற அடைமொழியுடன் கூடிய செல்வம். என்பவர். இவர் அரிதிலும் அரிதான இருபதுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்  ரகங்களான ஆத்தூர் கிச்சலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி, ரோஜாப்பூ சம்பா, இலுப்பைப்பூ சம்பா, சொர்ணம் மசூரி, சீரக சம்பா, சிங்க்கார் என இருபதுக்கும் மேற்பட்ட  பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார்.  

இவரது இயற்கை விவசாயம் உழைப்புக்கேற்ற நல்ல விளைச்சளையும் அதற்குண்டான வருமானத்தையும், முக்கியமாக நஞ்சில்லாத உணவையும் தந்து வருவதால் அதனை விடாமல் செய்து வருகிறார். இந்நிலையில் தான் பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்து வருவதை சக விவசாயிகளுக்கு எளிமையான முறையில் ஆலோசனைகள் வழங்கி இலவசமாக விதைநெல்லையும் வழங்கி வருகிறார். இந்நிலையில் இவர் ஒவ்வொரு ஆண்டும் தனது பாரம்பரிய விவசாய விளைநிலத்தில் இளைய தலைமுறை பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட வேண்டும், இதன் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  பாரம்பரிய நெல் ரகங்களை கொண்டு வயலிலேயே வித விதமான ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 


அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மாறுப்பட்ட முயற்சிகளை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயற்கை விவசாயி செல்வம் இந்த ஆண்டு தனது விவசாய விளைநிலத்தில் பயிரிட்டுள்ள நெல்லில் மிகவும் கடினமான கட்டிடக்கலை,  கட்டமைப்புகளை ஏற்படுத்த முயற்சித்தார். அதன்படி தஞ்சை பெரிய கோவில், தாஜ்மஹால், பிரமிட், குறித்த வடிவங்களை ஆத்தூர் கிச்சலி சம்பா நெல் பயிரில் உருவாக்க முயற்சித்து வருகிறார். இவரின் முயற்சிக்கு பல்வேறு விவசாயிகளும் பலதரப்பட்ட  மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


முக்கியமாக மறைந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் அனைவரும் விழிப்புணர்வு பெற்று மண்ணுக்கும் மனிதர்களுக்கும் தீங்கில்லாத இயற்கை  விவசாயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவற்காகவே ஒவ்வொரு ஆண்டும் இப்படி பாரம்பரிய நடவு வயலில் விதவிதமாக ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை வடிப்பதை முயற்சி செய்து வருவதாக நெல் செல்வம் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment

*/