இந்நிலையில் இன்று திடீரென சுரங்கம் இரண்டு பகுதியில் உள்ள லிக்னைட் பெஞ்சின் drivehead பகுதியில், ஏற்பட்ட தீ விபத்தால், கன்வேயர் பெல்ட் முழுவதும், வானுயிர தீப்பற்றி எரிந்தது. இதனால் இரண்டாவது சுரங்கம் முழுவதுமே, புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்து தகவல் அறிந்த என்எல்சி நிர்வாகம், தீயணைப்புத் துறையினர் உதவியுடன், நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முதற்கட்டமாக கன்வேயர் பெல்ட் மற்றும் drivehead பகுதி உராய்வின் காரணமாகவோ அல்லது மின் கசிவு காரணமாகவோ தீப்பிடித்து எறிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது, தொடர்ச்சியாக சுரங்கப் பகுதிகளில் இதுபோல் சம்பவங்கள் அரங்கேறி வருவதால், சுரங்கத் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும், என்எல்சி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment