டெல்லி பாராளுமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் அவர்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்து வடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 December 2023

டெல்லி பாராளுமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் அவர்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்து வடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


டெல்லி பாராளுமன்றத்தில் மர்ம நபர் வீசிய வண்ண புகை குண்டு நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது, இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது நாடாளுமன்றத்திலே முறையான பாதுகாப்பு அற்றத்தன்மை நிலவுகிறது என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதால் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வடலூர் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தை கட்சியின் முற்போக்கு மாணவரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய  அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது, இந்நிகழ்வில் நூற்றுக்கும்  விடுதலை சிறுத்தை கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரதராஜ் ,சிற்றரசு, வழக்கறிஞர் ஆனந்த் மற்றும் விசிக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என நுற்றுக்கு மேற்பட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/