வடலூர் ரயில்வே கேட் அருகே உள்ள பிள்ளையார் கோவில் 5அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 December 2023

வடலூர் ரயில்வே கேட் அருகே உள்ள பிள்ளையார் கோவில் 5அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்.


கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலை ரயில்வே கேட் அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் பூசாரியாக இருப்பவர் கந்தன் இவர் கோயில் வளாகத்தில் காவடி வைக்கப்படும் அறையை திறந்து உள்ளே நுழைய முற்பட்ட போது அங்கு பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் அவர் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவடி அறையில் மறைந்திருந்த சுமார் 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

கோவில் வளாகத்தில் திடீரென பாம்பு மீட்கப்பட்டதை காண அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, துரிதமாக செயல்பட்டு பாம்பை பிடித்த தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு அப்பகுதியினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*/