பள்ளி வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருட்கள், பீடி, சிகரெட் போன்ற பொருட்கள் விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். மற்றும் சேத்தியாத்தோப்பு தெற்கு மெயின் ரோடு, வடக்கு மெயின் ரோடு,டிஜிஎம் பள்ளி சாலை ஆகிய இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் பொது சுகாதார ஆய்வாளர்களும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்ட போது மூன்று கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதைக் கண்டறிந்த அபராதம் விதிக்கப்பட்டதுடன் புகையிலைப் பொருட்களால் மனிதர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் பற்றியும் விளக்கிக் கூறினார்கள்.
புகையிலை பொருட்கள் சம்பந்தப்பட்ட இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நல்லதம்பி, சுப்பிரமணியம் ஆகியோரும் பொது சுகாதார வட்டார மேற்பார்வையாளர் கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் வனிதா ஆகியோரும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

No comments:
Post a Comment