இந்நிலையில் கடந்த 07.12.23 அன்று வெண்ணிலாவிற்கு திடீர் உடல்நலம் குறைவு ஏற்பட்டு காய்ச்சல் அதிகமானதால் வடலூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார் பின்னர் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் அவர் வடலூர் சபை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென உயிரிழந்தார்.
மேலும் தென்குத்து புதுநகர் பகுதியில் முறையான அடிப்படை வசதி இல்லாத காரணத்தினாலும் வடலூர் நகராட்சி நிர்வாகத்தால் குடியிருப்புகளுக்கு அருகே குப்பைகளை கொட்டி வரும் காரணத்தால் நோய் தொற்று அதிக அளவில் பரவி உள்ளதாகவும் இதுவரை சுமார் 12 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முறையாக பரிசோதனை மேற்கொண்டால் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கோரி வானகிராயபுரம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் அளித்தேம் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும் அதிக அளவில் எங்கு பரவியதாக செய்தி வெளியானதால் அவசர அவசரமாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதும் தெருக்களில் வீசிங் பவுடர் தெளிப்பது போன்ற பணிகளை செய்துவிட்டு போட்டோ எடுத்து சென்று உள்ளார் என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வலுக்கிறது

No comments:
Post a Comment