கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி அதிமுகவின் நகரச் செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அதிமுகவின் நகர கழக நிர்வாகிகளும், கிளைக்கழக நிர்வாகிகளும்,வார்டு கவுன்சிலர்களும், கட்சித் தொண்டர்களும் பெருந்திரளாக வந்திருந்து மலர் தூவி முன்னாள் முதல்வரின் நினைவுகளுடன் ஓரிரு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகரச் செயலாளர் எஸ் கே நன்மாறன், மாவட்ட பிரதிநிதி தெய்வ.ராஜகுரு, அவைத் தலைவர் கோழி கோவிந்தசாமி, பொருளாளர் ராமலிங்கம், பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலர் கே.பி.ஜிகார்த்திகேயன், டைலர்குணசேகரன், லிங்குசாமி, ஸ்ரீதர், மதியழகன், சர்புதீன், அண்ணா, பிரபாகரன், ராமமூர்த்தி மற்றும் மகேந்திரன், சங்கர், கணேசன், மணிமாறன், சுரேஷ், முருகன், கனகரத்தினம், திலீப், குருதேவ்சிங் இவர்களுடன் அதிமுகவின் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment