அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 67வது நினைவு நாளை முன்னிட்டு வடலூரில் திராவிடர் கழகம் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்றனர். 6.12.2023 அன்று காலை 10 மணி அளவில் வடலூர் குறுக்கு சாலையில் உள்ள அம்பேத்கர் பெரியார் சிலைகளுக்கு ஏராளமானோர் மாலை அணிவித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் சிவசக்தி நகர செயலாளர் கண்ணன் நகர பொருளாளர் சுரேஷ் நகர திமுக தலைவர் புலவர் ராவணன் அமைப்பாளர் முருகன் ஒன்றிய அமைப்பாளர் சேகர் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம் தென்னவன் பாஸ்கர் இடிமுழக்கம் இந்திரஜித் அதியமான் இளமாறன் பொறியாளர் புகழேந்தி மற்றும் ஏராளமான தோழர்கள் நிகழ்வில் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment