இந்நிலையில் நேற்று பேரூர் கிராமத்தின் அருகில் வயல் வெளிப் பாதையில் கோகுலகிருஷ்ணன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததைக கண்டனர். கண்டவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஒரு கிணற்றில் கோகுலகிருஷ்ணன் பிணமாக மிதப்பதைக் கண்டனர். உடனடியாக கிணற்றில் சடலமாக கிடந்த கோகுல கிருஷ்ணன் உடலை மீட்டு ஆராய்ந்த போது சிறுவனின் தலையின் பின்புறம் காயத்தோடு இருப்பதைக் கண்டனர்.
பின்னர் கோகுலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரம் காதல் விவகாரம் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் சிறுவனோடு பழகி வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஐந்துநபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சிறுவனின் கொலை அப்பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.

No comments:
Post a Comment