குள்ளஞ்சாவடி அருகே காதலி தற்கொலை செய்து கொண்ட விரக்தியிலிருந்த வாலிபர் தனது கை, கால்களை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து உயிரிழந்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 December 2023

குள்ளஞ்சாவடி அருகே காதலி தற்கொலை செய்து கொண்ட விரக்தியிலிருந்த வாலிபர் தனது கை, கால்களை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து உயிரிழந்தார்.


கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கஞ்சமநாதன் பேட்டையை சேர்ந்தவர் ஜோதி என்பவரது மகன் அசோக்குமார் (26) இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடலூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது, அவருக்கும் தூக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. 

கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த இளம் பெண் கடந்த 29ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அசோக் குமார் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலிலும், விரத்தியிலும் இருந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் நேற்று மாலை தனது பெற்றோரிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி அசோக்குமார் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில் இன்று தம்பிபேட்டையில் உள்ள விளைநிலத்தில் அருகே உள்ள தரை கிணற்றில் அசோக்குமார் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். 


நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், அந்த விளை நிலத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது கை கால்களை தானே கயிற்றால் கட்டிக் கொண்டு அந்த தரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது  இதுகுறித்து தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் தொடர்ந்து அசோக்குமாரின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குள்ளஞ்சாவடி காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து அசோக் குமார் தானாக கை கால்களை கட்டிக்கொண்டு கிணத்தில் குதித்தாரா அல்லது வேறு யாரென்றும் அவரை கை கால்களை கட்டி கிணற்றில் போட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படு உள்ளது. 

No comments:

Post a Comment

*/