அரசு மருத்துவமனையில் வேலை செய்யாத கணிப்பொறி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 December 2023

அரசு மருத்துவமனையில் வேலை செய்யாத கணிப்பொறி.

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே வட்டார அளவிலான அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இங்கு ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர் நாள் ஒன்றுக்கு குறைந்தது 300க்கும் அதிகமான நோயாளிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது.


இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் வருகைபுரியும் புறநோயாளிகளுக்கு கணினி மூலமாக சீட்டு வழங்கும் நடைமுறை பல வருடங்களாக இருந்து வரும் நிலையில் தற்போது பல மாதங்களாக புறநோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் கணிப்பொறி வேலை செய்யவில்லை இதனால் புற நோயாளிகள் மணி கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டியது உள்ளது சம்பந்தப்பட்ட மருத்துவ துறையும் மாவட்ட நிர்வாகமும் கணிப்பொறி வேலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

*/