பின்னலூர் ராமலிங்கேஸ்வரர் ஆலயத்தில்நடந்த சனிப் பெயர்ச்சி விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2023

பின்னலூர் ராமலிங்கேஸ்வரர் ஆலயத்தில்நடந்த சனிப் பெயர்ச்சி விழா.


கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள பின்னலூர் கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழமையான ராமலிங்கேஸ்வரர் உடனுறை பர்வதவர்த்தினி சிவாலயம். இந்த சிவாலயத்தில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் சனிப்பெயற்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு யாகம் நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் ராமலிங்கேஸ்வரர் உடனுறை பர்வத வர்த்தினி அம்மனை வணங்கினார்கள். பின்னர் சனீஸ்வரருக்கு  பால், தயிர், பன்னீர், சந்தணம் போன்றவைகளால் செய்யப்பட்டஅபிஷேகம், அலங்காரம், தீப தூப ஆராதனை, இவைகளை பக்தர்கள் மனதார வேண்டி கண் குளிரக்கண்டு வணங்கினார்கள், மற்றும் தற்போதைய சனிக் கிரக பெயர்ச்சியினால்பரிகாரம் செய்ய வேண்டியராசிகளாகிய கடகம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கான சிறப்பு பரிகார யாகபூஜை செய்யப்பட்டது. 

No comments:

Post a Comment

*/