வடலூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 December 2023

வடலூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம்.


இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25ஆம் தேதி கிறித்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது, இந்நிலையில் கடலூர் மாவட்டம் வடலூர் கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

வடலூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தின் பங்குத்தந்தை சூசை ராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் வடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பல்வேறு கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர், பின்னர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் விதமாக ஆராரோ ஆரிரரோ பாடலுடன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட மாட்டு கொட்டகை போன்ற அமைப்பு கொண்ட பிரம்மாண்ட குடிலில் குழந்தை இயேசுவின் சுருபம் வைக்கப்பட்டது.

மேலும் ஆலய வளாகம் முழுவதும் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது, இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். 


- தே.தனுஷ் குறிஞ்சிப்பாடி செய்தியாளர் 8667557062 

No comments:

Post a Comment

*/