அமைதியாகப் போய்க் கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் அதே ஊரைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவர் உள்ளே நுழைகிறார். வெளிநாட்டில் வேலை செய்து வரும் தங்கபாண்டியன் அவ்வப்போது கிராமத்திற்கு வந்து செல்வார். அப்போது நாகலட்சுமிக்கும், தங்க பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அன்னியோன்ய உறவாக மாறியது.
இதனையறிந்த மாமல்லன் குடும்பத்தின் கௌரவம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி மனைவி நாகலட்சுமியை கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளக்காதலை மனைவி நாகலட்சுமி கைவிடுவதாக இல்லை. வெளிநாட்டில் ஓட்டுனராக இருக்கும் தங்க பாண்டியனிடம் தனது கணவனுக்குத் தெரியாமல் ஆடியோ கால் மற்றும் வீடியோகாலில் பேசிவந்துள்ளார், சரி உள்ளூரில் இருந்தால் தான் மனைவி நாகலட்சுமி இப்படி இருக்கிறார் என்று முடிவு செய்த மாமல்லன் குடும்பத்தோடு அருகில் உள்ள சிதம்பரம் நகரத்திற்கு குடி பெயர்கிறார். பிள்ளைகளை அங்கேயே படிக்க வைத்து விட்டு சிதம்பரத்திலிருந்து தினமும் டேங்க் ஆபரேட்டர் பணிக்கு வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த 19ஆம் தேதி வேலைக்கு வந்த போது மர்மமான முறையில் தலையில் கடுமையான ரத்தக் காயங்களுடன் மேல வன்னியூர் சாலையோரம் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்த நிலையில் மாமல்லன் இறப்பிற்கு மனைவி நாகலட்சுமியின் கள்ளக்காதல் தான் காரணம் என அறிந்தனர். பின்னர் நாகலட்சுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வெளிநாட்டில் வேலை பார்க்கும் தங்கபாண்டியனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததும் இதனை கணவர் மாமல்லன் தொடர்ந்து தட்டிக் கேட்கவே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளிக்கும்போது தற்போது தங்கபாண்டியன் வெளிநாட்டில் இருந்து வருவதாகவும் இந்நிலையில் தங்கள் கள்ளக்காதலை கணவர் மாமல்லன் அடிக்கடி தட்டி கேட்கவே இதைப் பற்றி வெளிநாட்டில் இருக்கும் தங்கபாண்டியனுடன் கலந்து பேசி பின்னர் தங்க பாண்டியன் தனது நண்பர்களான காட்டுமன்னாரகோவில் பகுதியைச் சேர்ந்த ராஜகுரு, இளவேந்தன் ஆகியோரை வைத்து மாமல்லனை தலையில் இரும்பு ராடால் அடித்து கொலை செய்து அதை விபத்து போல செட்டப் செய்தார்கள் என்று நாகலட்சுமி நடந்ததை அப்படியே ஒப்பித்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக நாகலட்சுமி, கொலை செய்த ராஜகுரு, இளவேந்தன் ஆகிய மூன்று பேரையும் குமராட்சி போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டில் இருக்கும் தங்கபாண்டியனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment