கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு கொளஞ்சியப்பர் ஆலயத்தில் தேமுதிக நகர செயலாளரும் இரண்டாவது வார்டு கவுன்சிலருமான ராஜ்குமார் தலைமையில் விருத்தாச்சலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேமுதிக நிறுவன தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் பூரண நலம் பெறவேண்டி கொளஞ்சியப்பர் ஆலயத்தில் விநாயகர் மற்றும் மூலவருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தும், பெண்கள் மடிப்பிச்சை ஏந்தியும், பிராது கட்டி வேண்டுதலும் வைத்தனர்,
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், சிவகொழுந்து , உமாநாத், மாவட்டத் தலைவர் பாலு, மாவட்ட பொருளாளர் ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட்னர்.

No comments:
Post a Comment