புவனகிரியில் பாஜக என் மண் என் மக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 December 2023

புவனகிரியில் பாஜக என் மண் என் மக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம்  புவனகிரியில் பாஜக என் மண் என் மக்கள்  யாத்திரை ஆலோசனை கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருமாவளவன்  தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக  மாநில துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மருதை ஆகியோர்  பங்கேற்று வரும் 7 ம் தேதி புவனகிரியில் மாநில தலைவர்  அண்ணாமலையின் என் மண் என் மக்கள்  யாத்திரை நடைபெற இருப்பதை முன்னிட்டு அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும் பாதயாத்திரை வெற்றியடைய செய்வது குறித்தும் கட்சி நிர்வாகிகளுக்கு  பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினர். 

நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சோமசுந்தரம் அனைவரையும் வரவேற்றார் .பட்டியல் அணி மாநில துணை தலைவர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் எம்.எம்.முருகன், விவசாய அணி  மாநில துணை தலைவர் ரமேஷ் கோவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் எஸ் ஆர் ராஜா சுந்தரமூர்த்தி,  ஆதிவராகன் முன்னாள் ஒன்றிய தலைவர் ராமநாதன் ஒன்றிய பொதுச் செயலாளர் தேவபெருமாள் ஒன்றிய துணைத் தலைவர்கள் சாந்தலட்சுமி திருமூர்த்தி  ஒன்றிய பொருளாளர்கள் ஜோதி மதிவாணன் இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் சக்திவேல் இளைஞர் அணி ஒன்றிய தலைவர் சந்தோஷ் ஒன்றிய பொருளாளர் கந்தசாமி பட்டியல் அணி மாவட்ட துணைத் தலைவர் இளையமாறன் ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் அன்பரசு  ஒன்றிய பொறுப்பாளர் ஞான சபாபதி உள்ளிட்ட கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நகர அணி பிரிவு நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர். 


முடிவில் ஒன்றிய தலைவர் நாகராஜன் நன்றி கூறினார் 

No comments:

Post a Comment

*/