அந்த ஆட்டை யாரோ மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். என்று தெரிந்ததையடுத்து இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில் சேத்தியாத்தோப்பு பால்பண்ணை அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அப்போது இரு சக்கர வாகனத்தில் ஆட்டோடு வந்த நபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்ததால் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போதுதான் அவர் ராஜன் என்பவரிடமிருந்து ஆட்டுக்குட்டியை திருடி தூக்கிச் சென்று வீட்டில் வைத்திருந்து, பிறகு அதனை விற்பதற்காக எடுத்துச் செல்வது தெரிய வந்தது.
இந்நிலையில் ஆடு திருடிய வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஞான பிரகாஷ் என்கின்ற போஸ்(23), சரத்குமார் (28) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து திருடிய ஆட்டுக்குட்டியை மீட்டனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment