கேபிள் புதைக்கும் பணி நடைபெற்று வருவதால் தற்பொழுது உள்ள சிமெண்ட் சாலை முழுவதும் முற்றிலுமாக சேதம் அடைந்து சேரும் சகதியும் ஆக காட்சியளிக்கிறது மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் தாங்களே பொருட்களை வாங்கி வந்து பைப் லைன் அமைத்துள்ளோம் நீங்கள் இதுபோல பைப் லைனை உடைத்து விட்டு அலட்சியமாக பதில் கூறுகிறீர்கள் என்று ஒப்பந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடலூர் நகராட்சி ஊழியர்கள் பைப் லைனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், கேபிள் புதைப்பதாக கூறி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் நேற்று இரவு அதே பகுதியில் சேதமான சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென சாலை உள்வாங்கியதால் இருசக்கர வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment