தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மக்களுடன் முதல்வர் என்ற மாபெரும் குறை தீர்ப்பு மக்கள் சேவை திட்டத்தை நேற்று கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பீட்டர் தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் அவர்கள் துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் புவனகிரி தாசில்தார் சித்ரா. அரசு துறைசார்ந்த அதிகாரிகள், காவல்துறையினர், பேரூராட்சி செயல் அலுவலர் பெ.திருமூர்த்தி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ்,திமுக மாவட்ட பிரதிநிதி G.சங்கர், நகர செயலாளர் A.R.முனவர் உசேன்,நகர இளைஞரணி அமைப்பாளர் M.S.ஜாபர் ஷெரீஃப்,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் தா.கலீல். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர் இதில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினார்
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment