கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீபுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட இணமங்கலம் கிராமத்தில் கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊரக வளர்ச்சித் துறையால் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் கட்டப்பட்டது. தற்பொழுது கட்டிடமானது ஆங்காங்கே இடிந்து எப்போது வேண்டுமானாலும் விழக்கூடிய நிலையில் இருந்து வருகிறது.
கட்டிடத்தில் இருந்த கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட பல்வேறு தளவாடப்பொருட்கள் மர்ம நபர்களால் ஏற்கனவே கழட்டிஎடுத்து செல்லப்பட்ட நிலையில் உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என கூறுகின்றனர். மேலும் தற்போது பாழடைந்து காணப்படும் கட்டிடமானது குடியிருப்புகள், கோவில், என மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது.கால்நடைகள் இந்த இடத்தின்உள்ளே தான் இரவு நேரங்களில் தஞ்சம் புகுகின்றன
. இதனை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது
No comments:
Post a Comment