இரவு நேரங்களில் கைவரிசை காட்டி வரும் மர்ம நபர்கள் மோட்டார் பம்பு செட்டுகள் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் ரூம்களை உடைத்து அதில் உள்ள மோட்டார் இயக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்டார்டர் மற்றும் ஸ்விட்ச் போர்டுகளிலிருந்து மோட்டார்களுக்கு செல்லும் கேபிள்கள் இடையில் உள்ள காப்பர் வயர்கள் ஆகியவற்றை திருடி செல்வது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் கருங்குழி ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ள குடிநீர் தொட்டியின் மோட்டார் ரூம்களிலும் இதுபோன்ற ஒயர்கள் மற்றும் மோட்டார் திருடும் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் சார்பில் பலமுறை வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தொடர்ந்து கைவரிசை காட்டி வரும் மர்மகும்பல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது, மேலும் கடந்த 26 .11. 23 அன்று இரவு மோட்டார் அறையில் மோட்டார்களை திருடும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தொடர்ந்து கடந்த 16.11.23 அன்று விவசாயி சூரியகுமார் என்பவரின் மோட்டார் அறையில் உள்ள மின்மோட்டார் மற்றும் காப்பர் வயர்கள் திருடப்பட்டாத கூறப்படும் நிலையில் வடலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார், விவசாயிதை நம்பி உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் பம்பு செட்டுகள் மற்றும் காப்பர் வயர்கள் தொடர்ந்து திருடப்படுவதால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் நீரின்றி வயல்கள் கருகி வரும் நிலையில் மின் மோட்டார்களின் உதவியுடன் வயல்வெளிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறோம் இது போன்று இரவு நேரங்களில் மின் மோட்டார்களை திருடும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குமுறுகின்றனர்.


No comments:
Post a Comment