கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுவது வழக்கம் இறந்தவர்களின் கல்லறைகளுக்குச் சென்று அவர்களை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி கிறிஸ்தவர்களால் கல்லறை திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
சகல ஆத்துமாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படும் கல்லறை திருநாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி நெய்வேலி மற்றும் வடலூர் பகுதியில் உள்ள கல்லறை தோட்டங்களில் உள்ள கல்லறைகளுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் மேற்கொண்டு கையில் மெழுகுவர்த்தி எந்தியவாறு கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் தேவாலயங்களில் இறந்தோர்களை நினைவு கூறும் வகையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது, நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062
No comments:
Post a Comment